#Breaking: உச்சத்தை தொட்ட கொரோனா – ஒரே நாளில் 817 பேருக்கு பாதிப்பு.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 12,203 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இன்று 567 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 9,909 பேர் குணமடைந்துள்ளனர். இன்று பாதிக்கப்பட்ட 817 பேரில் 138 பேர் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் என்றும் ஒருவர் கேரளா சென்று வந்தவர் எனவும் கூறியுள்ளனர். இன்று ஒரே நாளில் 11,231 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4,42,970 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மருத்துவமனையில் 8,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“மைக்கை நீட்டினால் எதையாவது உளறுவது” – விஜய்க்கு பணக்கொழுப்பு என கூறிய சீமானுக்கு தவெக பதிலடி!
February 12, 2025
ஐபிஎலில் விளையாடுவாரா சஞ்சு சாம்சன்? ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை.! வெளியான தகவல்..,
February 12, 2025
INDvENG : புரட்டி எடுத்த சுப்மன் கில்..இங்கிலாந்துக்கு இந்தியா வைத்த பெரிய இலக்கு!
February 12, 2025
“பேத்தி வேண்டாம்.. பேரன் வேண்டும்” – நடிகர் சிரஞ்சீவியின் பேச்சால் வெடித்தது சர்ச்சை.!
February 12, 2025