கே.சி. பழனிசாமி கோவையில் வசித்து வருகிறார். இவர் அதிமுகவின் முன்னாள் எம்.பி. ஆவார். அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து பின்னர் ஒன்றாக சேர்ந்தபோது கே.சி.பழனிசாமிக்கு கட்சியில் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது.அந்த சமயத்தில்தொலைக்காட்சி விவாதத்தில் ,மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று கருத்து தெரிவித்தார் .இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதற்கு இடையில் கே.சி.பழனிசாமி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் ,அதிமுகவின் இணையதளம் ,கொடி,லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார் என்று அவர் மீது சூலூரைச் சேர்ந்த கந்தவேல் போலீசில் புகார் அளித்தார் .இந்தப் புகாரை தொடர்ந்து கோவை மாவட்ட சூலூர் போலீசார் அவரை இன்று கைது செய்தது.மேலும் நம்பியவர்களை ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உள்ளிட்ட 11 பிரிவுகளில் கீழ் பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
எனவே இன்று கே.சி.பழனிசாமி சூலூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்பொழுது , பழனிசாமியை பிப்ரவரி 7 -ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க ஆணை பிறப்பித்தார் .நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதை அடுத்து கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…