, ,

நாளை அமைச்சராக பதவி ஏற்கிறார் உதயநிதி ஸ்டாலின்.! ஆளுநர் மாளிகையில் விழா ஏற்பாடு தீவிரம்.!

By

ஆளுநர் மாளிகையில் நாளை அமைச்சராக பொறுப்பேற்கிறார் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருக்கிறது . அதனை பொருட்டு நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

அதில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். நாளை ஆளுநர் மாளிகையில் இந்த விழா நடைபெற உள்ளது.

இதில் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் விளையாட்டு துறை மற்றும் சிறப்பு  திட்ட அமலாக்கத்துறை அமைச்சராக பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது.

 

Dinasuvadu Media @2023