சற்று முன்…இளைஞர்களுக்கு ‘உயிர்காக்கும் பயிற்சி’ திட்டம் – தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவ பகுதிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு கடற்கரை உயிர் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைச்செயலகத்தில் இருந்தவாறு காணொளி காட்சி மூலமாக சற்று முன்னர் தொடங்கி வைத்துள்ளார்.
இத்திட்டத்தின் மூலம்,கடலில் மூழ்கி தவிப்பவர்களை மீட்கவும்,கடல் விபத்துகளை குறைக்கவும் 14 கடலோர கிராமங்களை சேர்ந்த 1000 இளைஞர்களுக்கு உயிர்காக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.இதற்காக ரூ.53 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடல் நீரில் தவறி மூழ்கி தவிப்பவர்களை பாதுகாப்பதற்கு 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக
1/2 pic.twitter.com/S7pI0SB3h9
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 7, 2022