#Justnow:முதல்வர் ஸ்டாலின் இன்று திருப்பத்தூர்,வேலூர் பயணம்!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று திருப்பத்தூர்,வேலூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.அதன்படி,இன்று காலை 9 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தை முதல்வர் திறந்து வைக்கவுள்ளார்.இதனைத் தொடர்ந்து,டான் போஸ்கோ பள்ளியில் நடைபெறும் அரசு விழாவில், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து,புதிய திட்டப்பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின்னர்,அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி முதல்வர் உரையாற்றவுள்ளார்.
இதனையடுத்து,நண்பகல் 12.15 மணிக்கு வேலூர் மாவட்டத்தில் புதிய நகர பேருந்து நிலையத்தை முதல்வர் திறந்து வைக்கவுள்ளார்.மேலும்,மாலை 4.45 மணிக்கு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து,புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி முதல்வர் உரையாற்றவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து,நாளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் திறந்து வைத்து,பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.இந்த அரசு விழாக்களில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.இதனிடையே,முதல்வரின் வருகை காரணமாக 3 மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.அதன்பின்னர்,சென்னைக்கு முதல்வர் திரும்ப உள்ளார் என்று கூறப்படுகிறது.