, ,

அமைச்சர்கள் அன்பில் மகேஷ், உதயநிதி பங்கேற்கும் மாநாட்டிற்கான வசூல்.? லஞ்சஒழிப்புதுறையில் புகார்.!

By

அமைச்சர்கள் உதயநிதி , அன்பில் மகேஷ் ஆகியோர் பங்கேற்கும் மாநாடு என கூறி சிலர் வசூலித்ததாக லஞ்சஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

திருச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொள்ளும் மாநாடு நடைபெற உள்ளதாக கூறி சிலர் நான்கொடை வசூல் செய்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பகுதிநேர ஆசிரியர்களிடம் இந்த வசூல் வேட்டை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனை லஞ்ச ஒழிப்பு துறையிடம் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை ஆணையருக்கு லஞ்ச ஒழிப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

 

 

Dinasuvadu Media @2023