திருவண்ணாமலையில் சந்திரசேகரர் தங்க சூரியபிரபை வாகனத்தில் வீதி உலா..!!!
திருவண்ணாமலையில் சந்திரசேகரர் தங்க சூரியபிரபை வாகனத்தில் வீதி உலா நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முன்தினம் வெகுச்சிறப்பாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் தனித்தனி வெள்ளி மற்றும் கண்ணாடி விமானத்தில் மாடவீதியில் பவனி வர பக்தர்கள் பக்தி கோஷத்துடன் சுவாமி தரிசனம் பெற்றனர்.இந்நிலையில் இரவு 10 மணியளவில் வாணவேடிக்கையுடன் சாமி வீதி உலா நடந்தது.
கார்த்திகை திருவிழாவின் 2-ம் நாளான நேற்று திருவண்ணாமலையில் காலை 11 மணியளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் தங்க சூரியபிரபை வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.
சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது அதன் பின்னர் மேள தாளங்கள் முழங்க மூஷிக வாகனத்தில் விநாயகரை தொடர்ந்து தங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரரும் கோவிலின் மாடவீதியை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வணங்கினர்.