சென்னை தலைமைச் செயலகத்தில் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டார். அதில்”தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 3.14 கோடி பெண்கள், 3.03 கோடி ஆண்கள் மற்றும் 8,294 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் 13 லட்சம் பெயர் சேர்த்துள்ளனர். 6 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கி உள்ளோம். பெயர் நீக்கியதற்கு காரணம் முகவரி மாற்றுவதற்காகவும், இறந்தவர்கள், மற்றும் போலி ஆவணங்கள் உள்ளிட்டவைக்காக 6 லட்சம் வாக்காளரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
3.23 லட்சம் வாக்களர் திருத்தம் செய்துள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதியாக சோழிங்கநல்லூர். இந்த தொகுதியில் 6.60 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதைத்தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதியில் 4.62 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல்… தேர்தல் பணிக்குழு அமைத்து அதிமுக அறிவிப்பு..!
தமிழ்நாட்டிலேயே குறைவான வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதியாக கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. அங்கு 1,72,140 வாக்காளர்கள் உள்ளனர். 2-வது குறைவாக உள்ள வாக்காளர்கள் தொகுதியாக சென்னை மாவட்டத்தில் உள்ள துறைமுக சட்டமன்ற தொகுதி உள்ளது” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…