மீண்டும் ஏறிய தங்கம் விலை... இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.13,370-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hero Image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரம் முழுவதும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த நிலையில், இன்றைய நிலவரப்படி தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை 22-ம் தேதி கிராம் ஒன்றுக்கு ரூ. 210 உயர்ந்து ரூ. 13,430-க்கும், சவரனுக்கு ரூ. 1,680 உயர்ந்து ரூ. 1,07,440-க்கும் விற்பனை தொடங்கிய தங்கம், ஜூலை 23 அன்று கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 13,500-க்கும், சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் வரலாற்றுச் சாதனையாக ரூ. 1,08,000 வரை உச்சம் தொட்டது.

அதனைத் தொடர்ந்து, ஜூலை 24-ம் தேதி மார்க்கெட்டில் திடீர் சரிவு ஏற்பட்டு, கிராமுக்கு ரூ. 270 குறைந்து ரூ. 13,230-க்கும், சவரனுக்கு அதிரடியாக ரூ. 2,160 குறைந்து ரூ. 1,05,840-க்கும் விற்பனையானது. பின்னர், ஜூலை 25 அன்று கிராம் ஒன்றுக்கு ரூ. 70 அதிகரித்து ரூ. 13,300-க்கும், சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து ரூ. 1,06,400-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஜூலை 26-ம்தேதியான நேற்றைய தினம் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்ந்தது.

இந்நிலையில், இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 70 உயர்ந்து ரூ. 13,370 என்ற விலையிலும், சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,06,960 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே, வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை; வழக்கம் போல் ஒரு கிராம் வெள்ளி ரூ. 240 என்றும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 2,40,000 என்றும் எந்தவித ஏற்ற இறக்கமின்றித் தொடர்ந்து நிலையாக விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.