ரோட் ஷோவில் ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் காயம்.!
ஆராவில் நடந்த ஜன் சுராஜ் கட்சி நிகழ்வின் போது வாகனம் மோதியதில் பிரசாந்த் கிஷோரின் விலா எலும்பில் லேசான காயம் ஏற்பட்டது.

பீகார் : ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், பீகார் மாநிலம் ஆராவில் நடைபெற்ற ‘பீகார் பத்லாவ் யாத்ரா’ என்ற பிரச்சார ரோட் ஷோவின் போது, நேற்றைய தீனம் (ஜூலை 18) அன்று காயமடைந்தார்.
ரோட் ஷோவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ஒரு பெண்ணுக்கு உதவ முயன்றபோது பிரசாந்த் கிஷோர் காயமடைந்தார். அவர் ஒரு கூட்டத்தின் வழியாக நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக ஒரு வாகனம் மோதியதில் காயம் ஏற்பட்டது. காயம் ஏற்பட்டவுடன் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். ஜன் சுராஜ் கட்சி இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது. அவரது உடல்நிலை இப்பொது சீராக உள்ளது. கிஷோரின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்த கட்சி, அவரது பிரச்சார நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்துள்ளது.
பிரசாந்த் கிஷோர், முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர், தற்போது ஜன் சுராஜ் கட்சியின் மூலம் பீகார் மாநிலத்தில் 2025 சட்டமன்றத் தேர்தலில் அனைத்து 243 தொகுதிகளிலும் போட்டியிட தயாராகி வருகிறார். இந்த ரோட் ஷோ, அவரது ‘பீகார் பத்லாவ் யாத்ரா’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது.