ரேசன் கடைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப அதிவேகமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது பேரவையில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கூட்டுறவு நியாய விலைக் கடைகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எந்த மாவட்டத்தில் எங்கு கடைகள் திறக்கப்படாமல் இருக்கிறது என்று குறிப்பிட்டு தெரிவித்தால் உடனடியாக கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், ரேசன் கடைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப அதிவேகமாக துறைரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே, தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியின் மூலமாக கட்டப்பட்ட கூட்டுறவு நியாவிலைக்கடைகள் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது என துணை சபாநாயகர் பிச்சாண்டி பேரவையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…