மாதா, பிதா, கூகுள், தெய்வம்.! மாணவர்ளின் குரு கூகுள் தான்.! அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.!
மாதா, பிதா, கூகுள் , தெய்வம் என கொள்கை மாறிவிட்டது. கூகுள் தற்போது மாணவர்களின் குருவாக மாறிவிட்டது. என அமைச்சர் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் திருமங்கலக்குடியில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார்.
அந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், ‘ இன்று நடைபெறும் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது எங்கள் இயக்க (திமுக) போராட்டம் அல்ல. அது நம் தாய் மொழியை பாதுகாக்க நடைபெறும் போராட்டம். ‘ என இந்தி திமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி பேசினார் .
மேலும் பேசுகையில், ‘ தற்போதுள்ள மாணவர்களிடையே மாதா, பிதா, குரு தெய்வம் என்பது மாறி, மாதா, பிதா, கூகுள் , தெய்வம் என கொள்கை மாறிவிட்டது. கூகுள் தற்போது மாணவர்களின் குருவாக மாறிவிட்டது. மாணவ, மாணவியரின் தேடல் கூகுளில் மட்டுமே இருக்கிறது. ‘ என பேசியுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ்.