, ,

அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை ஒத்திகை.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு.!

By

அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் கொரோனா சிகிச்சை ஒத்திகை பணிகளை சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகம் வருவதால் இந்தியாவில் கொரோனாவை முன்கூட்டியே தடுக்க மத்திய சுகாதாரதுறை அறிவுறுத்தலின் பெயரில் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இன்று நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை ஒத்திகை நிகழ்வு நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் அதே போல கொரோனா சிகிச்சை ஒத்திகை நடைபெறுகிறது. சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அவர் கூறுகையில், மருத்துவமனைகளில் கொரோனாவை எதிர்கொள்ள ஆக்சிஜன் சிலிண்டர் வசதி போதுமானதாக இருக்கிறதா.? வெண்டிலேட்டர் வசதி போதுமானதாக இருக்கிறதா.? போதுமான படுக்கைகள் ஆய்வு இருக்கிறதா.? மருந்தகத்தில்  எந்தெந்த மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்பட்டது அதற்கான போதுமான இருப்பு இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்டோம் என அமைச்சர் தெரிவித்தார்.

Dinasuvadu Media @2023