, ,

நரிக்குறவர் பெண்கள் உற்பத்தி செய்யும் விற்பனை மையத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

By

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்பூதூர் பூமாலை வணிக வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் நரிக்குறவ பெண்கள் பயன்பெறும் வகையில் விற்பனை மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள பூ மார்க்கெட் வணிக வளாகத்தில் நரிக்குறவர்கள் இன பெண்கள் பயன்பெரும் வகையில் ஓர் விற்பனை மையம் அமைக்கப்பட்டது. இந்த விற்பனை மையம் மூலம் நரிக்குறவ பெண்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

நரிக்குறவ பெண்களுக்கான விற்பனை மையம் : நரிக்குறவர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் தான் தயாரிக்கும் பொருட்களை மேற்கண்ட விற்பனை மையம் மூலம் விற்பனை செய்து கொள்ளலாம். இந்த விற்பனை மையத்தை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் வந்த திறந்து வைத்தார்.  பின்னர் அங்குள்ள மகளிர் சுயஉதவி குழுவினருடன் அமைச்சர் உதயநிதி கலந்துரையாடினார்.

இந்த விழாவில் சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில்த்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்,  கலந்துகொண்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், செல்வப் பெருந்தகை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Dinasuvadu Media @2023