குடியரசு துணை தலைவர் ராஜினாமா: ஜெகதீப் தன்கர் நலமுடன் வாழ பிரதமர் மோடி வாழ்த்து.!!
குடியரசு துணைத்தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த நிலையில், பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

டெல்லி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களைச் சுட்டிக்காட்டி, நேற்றைய தினம் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார், மேலும் இது இந்திய அரசியலமைப்பின் 67 (ஏ) பிரிவின் கீழ் உள்துறை அமைச்சகத்தால் உறுதிப்படுத்தப்பட்டது.
மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றி, உடல்நலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் முடிவாக இந்த ராஜினாமா இருப்பதாக தன்கர் அறிவித்தார். 2027-ஆம் ஆண்டு வரை பதவிக் காலம் உள்ள நிலையில், இவரது திடீர் ராஜினாமா விவகாரம் இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அடுத்த துணைத் தலைவர் யார் என்பது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.
தற்பொழுது, குடியரசு துணைத்தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது பதிவில், ” நாட்டிற்கு சேவை செய்ய ஜெகதீப் தன்கருக்கு பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன, ஜெகதீப் தன்கர் உடல் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Shri Jagdeep Dhankhar Ji has got many opportunities to serve our country in various capacities, including as the Vice President of India. Wishing him good health.
श्री जगदीप धनखड़ जी को भारत के उपराष्ट्रपति सहित कई भूमिकाओं में देश की सेवा करने का अवसर मिला है। मैं उनके उत्तम…
— Narendra Modi (@narendramodi) July 22, 2025