,

மழைக்கான விடுமுறைகள் சனிக்கிழமைகளில் ஈடு செய்யப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ்

By

மழையால் விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பல மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மழைக்காரணமாக பள்ளிகளுக்கு அளிக்கப்படும் விடுமுறை குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மழையால் விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என தெரிவித்துள்ளார்.

Dinasuvadu Media @2023