தமிழக டிஜிபி திரிபாதி வரும் 30-ம் தேதி நாளையுடன் ஒய்வு பெறும் நிலையில், தமிழகத்தின் சட்டம் & ஒழுங்கு புதிய டிஜிபி யாக சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் 29-வது சட்ட ஒழுங்கு டிஜிபி-யான திரிபாதி அவர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அவர் வரும் 30ஆம் தேதி நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து, தமிழகத்தின் 30-வது டிஜிபி யார் என்பதை தேர்வு செய்ய, மத்திய தேர்வாணைய குழுவும், உள்துறை அமைச்சகமும் கடந்த 28-ம் தேதி ஆலோசனை நடத்தியது.
அதனைத் தொடர்ந்து, சீனியாரிட்டி அடிப்படையில்தான் டிஜிபி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால்,தமிழக டிஜிபியாக நியமனம் செய்ய 3 பேர் கொண்ட இறுதிப்பட்டியலை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) மாநில அரசுக்கு பரிந்துறை செய்தது.
இந்த பட்டியலில் 1987 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான ரயில்வே துறை டி.ஜி.பி-யாகப் பணியாற்றி வரும் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நாளையுடன் தமிழக டிஜிபி திரிபாதி ஓய்வு பெறயிருக்கும் நிலையில் தமிழகத்தின் 30 வது சட்டம் & ஒழுங்கு டிஜிபி யாக தமிழகத்தை சேர்ந்த சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் பொறுப்பேற்க உள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…