எடப்பாடியார் எப்போது முதல்வராவார் என ஒட்டுமொத்த தமிழகமும் கேட்கிறது – எஸ்.பி.வேலுமணி

எடப்பாடியார் எப்போது முதல்வராவார் என்று ஒட்டுமொத்த தமிழகமும் கேட்கிறது என எஸ்.பி.வேலுமணி பேச்சு.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்வைக் கண்டித்து, அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி அவர்கள் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், அம்மா, எடப்பாடியார் ஆட்சியில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விலையைக் குறைத்து மக்களுக்கு கொடுத்தோம். இப்போது சோப்பு முதல் சீப்பு வரை எல்லா பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. பெங்களூருவுக்குச் சென்று இந்தியாவையே மாற்றியமைக்கிறோம் என்று சொல்கிறார். அங்கு சென்று காவிரி நதி நீர்ப் பிரச்னை குறித்துப் பேசினாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அரசு கஜானாவுக்குச் செல்ல வேண்டியதை வைத்து, இவர்களின் கஜானாவை நிரப்பிக் கொள்கிறார்கள். எடப்பாடியார் எப்போது முதல்வராவார் என்று ஒட்டுமொத்த தமிழகமும் கேட்கிறது என தெரிவித்துள்ளார்.