அறநிலையத்துறை விவகாரம் : விசிக ஆர்ப்பாட்டத்தில் துரை வைகோ பங்கேற்பு.! திருமாவளவன் தகவல்.! 

thirumavalavan

அறநிலையத்துறை விவகாரம் தொடர்பாக விசிக நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்தில் துரை வைகோ பங்கேற்கிறார் என திருமாவளவன் கூறியுள்ளார். 

இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்தனர். அந்த சந்திப்பு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய திருமாவளவன் நான் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிமுக முதன்மை செயலர் துரை வைகோவுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தேன் என குறிப்பிட்டார்.

மேலும் பேசிய திருமாவளவன், தற்போது திராவிட இயக்கத்தின் போர்வாள் என்றால் அது வைகோ தான். தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வைகோ விளங்குகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக துரை வைகோவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். மக்கள் பக்கம் நிற்க்கும் மதிமுகவுக்கு விடுதலை சிறுத்தைகள் உற்ற துணையாக இருப்போம் என குறிப்பிட்டார்.

தமிழகத்தில், அரநிலையத்துறை கட்டுப்பாட்டில் 43 ஆயிரம் கோவில்கள் உள்ளன. அங்கெல்லாம், ஒரு ஆதிதிராவிடர், ஒரு பெண் இருக்கும் வகையில் அறங்காவலர் குழு நியமிக்கப்பட வேண்டும் என சட்டம் இருகிற்து. அதனை உடனாடியாக நிறைவேற்ற வேண்டும் என விசிக சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதில் புதிய மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ பங்கேற்கிறார். மக்களின் நீண்ட கால சிக்கல்களைசீர் செய்யும் அரசாக திமுக விளங்குகிறது. அதனால் திமுக அரசு, இந்த கோவில் பிரச்னையையையும் தீர்க்கும் என திமாவளவன் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்