அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளில் வெவ்வேறு தேர்வு மையங்கள் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், குழப்பத்துக்கு தீர்வு வழங்கி உள்ளது TNPSC.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான துறை தேர்வுகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்தாண்டுக்கான தேர்வு வரும் 16-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை டி.என்.பி.சி மூலமாக நடைபெற இருக்கிறது. ஆன்லைன் மூலமாக தேர்வு எழுத விண்ணப்பிக்கப்பட்டு வந்த நிலையில், தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் (நுழைவு சீட்டு) நேற்று வெளியிடப்பட்டது.
ஆனால், தேர்வு எழுதுபவர்களுக்கு பெரும் குழப்பமே ஏற்பட்டது. அதாவது, தேர்வும் எழுதும் ஒரு சிலருக்கு காலையில் ஒரு தேர்வு மையமும், மாலையில் மற்றொரு தேர்வு மையமும் ஹால்டிக்கெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இருவேறு தேர்வு மையத்துக்கு 70 முதல் 100 கிலோ மீட்டர் வரை தொலைவு இருப்பதாக தகவல் கூறப்பட்ட நிலையில், குழப்பம் எழுந்தது.
இந்த நிலையில், அரசு துறை பதவி உயர்வு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. சில நிர்வாக காரணங்களால் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான ஹால்டிக்கெட் சில திருத்தங்களுடன் மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி விளக்கமளித்துள்ளது.
எனவே, திருத்தப்பட்ட ஹால் டிக்கெட்டுகளை http://tnpsc.gov.in & https://apply.tnpscexams.in/dept-exam-otr?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளத்தில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம். தேர்வர்கள் ஒருமுறை பதிவின் வழியாக பிறந்த தேதி,விண்ணப்ப எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…