, ,

ஓ அப்படியா நல்லாருக்கு… இபிஎஸ் கருத்துக்கு உதயநிதி ஸ்டாலின் கலகலப்பான ரீப்ளே.!

By

திராவிட மாடல் ஆட்சி நாங்கள் கொண்டு வந்ததது என இபிஎஸ் கூறியது பற்றி பேசுகையில் சிரித்துக்கொண்டே ஓ அப்படியா நல்லாருக்கு என உதயநிதி சென்றுவிட்டார். 

இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக விளையாட்டு பூங்கா திறக்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.அப்போது திராவிட மாடல் ஆட்சி என்பது அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது என இபிஎஸ் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு உதயநிதி ஸ்டாலின் சிறப்புடன், ‘ ஓ அப்படியா நல்லாருக்கு நல்லாருக்கு என சிரித்தவாறே சென்றுவிட்டார். இதனால் அங்கு சிரிப்பலைகள் எழுந்தது.

Dinasuvadu Media @2023