,

தொண்டர்களை சந்திக்கும் விஜயகாந்த்..!

By

புத்தாண்டு தினத்தில் கழகத்தினரையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த். 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் வரும் புத்தாண்டு தினத்தில் கழகத்தினரையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் கழகத்தினரையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம். அதன்படி வரும் புத்தாண்டு தினத்தில் (01.01.2023) சென்னை தேமுதிக தலைமை கழகத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கழகத்தினரையும், பொதுமக்களையும் சந்தித்து வாழ்த்துக்களை பகிர்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Dinasuvadu Media @2023