,

உங்களோடு நாங்கள் இருக்கிறோம் – அமைச்சர் அன்பில் மகேஷ்

By

மாற்றுத்திறனாளிகளைப் பெற்ற பெற்றோர்கள் கடவுளுக்கு சமம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு. 

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளிகளின் சிரிப்பிலும், மகிழ்விலும் எங்களது தலைவர் கலைஞரை பார்க்கிறோம். பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து விடு. அவர்களை நான் வாழவைத்து விடுகிறேன் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார்; உங்களோடு நாங்கள் இருக்கிறோம் – மேடையில் சைகை மூலம் செய்து காட்டினார்.

மேலும், மாற்றுத்திறனாளிகளைப் பெற்ற பெற்றோர்கள் கடவுளுக்கு சமம். தயவு செய்து நம் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என டெஹ்ரிவித்துள்ளார்.

Dinasuvadu Media @2023