காலிஸ்தானி போராட்டம்; இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் வைக்கப்பட்ட மூவர்ணக்கொடி.!

காலிஸ்தானி ஆதரவாளர்களின் புதிய போராட்டங்களுக்கு மத்தியில் இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் மீண்டும் மூவர்ணக்கொடி வைக்கப்பட்டுள்ளது.

காலிஸ்தானி ஆதரவாளர்களின் புதிய போராட்டங்களுக்கு மத்தியில் இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் மீண்டும் மூவர்ணக்கொடி வைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் லண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிப அலுவலகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்களின் போராட்டம் மற்றும் நாசவேலைகளினால் இந்தியக்கொடி இறக்கப்பட்டதையடுத்து, தற்போது மீண்டும் உயர் ஸ்தானிப அலுவலகத்தின் உயரத்தில் மூவர்ணக்கொடி அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

unknown node

முன்னதாக, பஞ்சாபில் அம்ரித்பால் சிங் மீதான அடக்குமுறைக்கு எதிராக காலிஸ்தானி ஆதரவாளர்கள், லண்டனில் தேசியக் கொடியை அகற்றிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, அதே கட்டிடத்தில் மீண்டும் ஒரு பெரிய இந்தியக் கொடி வைக்கப்பட்டது.

காலிஸ்தானி ஆதரவாளர்களின் புதிய எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில், லண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிப அலுவலகத்தில் பாதுகாப்பை இங்கிலாந்து காவல்துறை மேலும் பலப்படுத்தியுள்ளது. இது குறித்து இந்தியா தனது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. மேலும் உயர் ஸ்தானிப அலுவலகத்திற்குள் நுழைய அனுமதித்த பிரிட்டிஷ் பாதுகாப்பு முழுமையாக இல்லாததற்கு, இந்தியா விளக்கம் கேட்டுள்ளது.

காலிஸ்தானி தீவிர ஆதரவாளரான அம்ரித்பால் சிங்குக்கு எதிராக, பஞ்சாப் அரசு முழு அளவிலான தாக்குதலை நடத்தியபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது. அவரது உதவியாளர்கள் பலரை போலீசார் கைது செய்தாலும், அம்ரித்பால் சிங் கைது குறித்து இன்னும் பலவித கருத்துகள் நிலவி வருகின்றன. அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டுள்ளதாக, அவரது தந்தை மற்றும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.