Asian Games: ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால் ஜோடி தங்கம் வென்று அசத்தல்.!

Published by
செந்தில்குமார்

கடந்த செப்டம்பர் 23ம் தேதி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கிய 19 ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆனது 12 வது நாளாக விறுவிறுப்பாக இன்று 12 வது நாளான இன்று மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது இதில் அதன்படி இந்த ஆசை விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் நாட்டிற்காக தங்கம், வெள்ளி என பல பதக்கங்களை வென்று வருகின்றனர்.

அந்த வகையில், இன்று ஆசிய விளையாட்டு போட்டியில் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பாக தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால் சிங் கலந்து கொண்டனர். இவர்களுக்கு எதிராக மலேசியாவை சேர்ந்த அஸ்மான் ஐஃபா மற்றும் முகமது சயாபிக் ஜோடி விளையாடியது. இதில் முதல் மற்றும் இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி 11 புள்ளிகள் என்ற வீதத்தில் முன்னிலை வகித்த நிலையில் முதல் இடத்தை பிடித்தது.

இதன் மூலம் இந்திய அணி ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றது. இந்த பதக்கத்தின் மூலம் இந்தியா வென்ற தங்க பதக்கத்தின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இது ஆசிய விளையாட்டுப் போட்டிவில் ஸ்குவாஷ் பிரிவில் இந்தியாவிற்கு இரண்டாவது தங்கம் ஆகும். இதற்கு முன்பு நடைபெற்ற ஸ்குவாஷ் பிரிவில் ஆண்கள் அணி தங்கப் பதக்கத்தை வென்றது.

மேலும், இந்தியா 20 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தமாக 83 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இதேபோல சீனா 174 தங்கம், 95 வெள்ளி, 53 வெண்கலம் என 322 பதக்கங்களை வென்று பதக்கபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 70 பதக்கங்களை வென்றது. தற்போது, 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 83 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

எடப்பாடி பழனிசாமி வேலையே பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் – முதல்வர் ஸ்டாலின் சாடல்!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

30 seconds ago

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

16 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

17 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

17 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

18 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

18 hours ago