பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.!

By

ஜிம்பாப்வேயில், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர்  நடைபெற்று வருகிறது. இத்தொடர் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

Image result for ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வேகடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியா – ஜிம்பாப்வே அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆட்ட நேர முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது ஜிம்பாப்வே அணி .

பின்னர் 152 ரன்க்ள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பிஞ்ச் 3 ரன்னிலும், கேரி 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

Image result for ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வேஅதன்பின் வந்த டிராவிட் ஹெட் 42 பந்தில் 48 ரன்களும், மேக்ஸ்வெல் 38 பந்தில் 56 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் ஆஸ்திரேலியாவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. ஸ்டாய்னிஸ் 7 பந்தில் 12 ரன்கள் அடிக்க 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் இடையிலான இறுதிப் போட்டி 8-ந்தேதி (நாளைமறுநாள்) நடக்கிறது.

Dinasuvadu Media @2023