பெங்களூர் அணி 16.3 ஓவர் முடிவில் ரன்கள் 181 எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்று ஐபிஎல் தொடரின் 16- வது லீக் போட்டியில் பெங்களூர் அணியும், ராஜஸ்தான் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.
முதலில் இறங்கிய ராஜஸ்தான் அணி20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 177 ரன்கள் எடுத்தனர். 178 ரன்கள் இலக்குடன் பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக கோலி, படிக்கல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் மரண அடி அடித்தனர்.
இதனால், இருவரும் அரைசதம் விளாசினர். அதிலும் அதிரடியாக விளையாடிய படிக்கல் 27 பந்தில் 52 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். இதைத்தொடர்ந்து, அதிரடி காட்டி வந்த படிக்கல் 51 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்ஸர் விளாசி ரன்கள் 101* எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
அதேபோல கோலி 47பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் விளாசி 72* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
இறுதியாக பெங்களூர் அணி 16.3 ஓவர் முடிவில் ரன்கள் 181 எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணி விளையாடிய 4 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…