#INDvsENG : கில்-ஜுரேல் நிதானத்தால் இந்திய அணி வெற்றி ..! டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தல் ..!

இந்தியா, இங்கிலாந்து அணியே நடைபெற்று வந்த 4-வது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 23- தேதி ராஞ்சியில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதனால் இந்த போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அதிலும் அந்த அணியின் வீரரான ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 122* ரன்கள் எடுத்திருந்தார்.

Read More : – #WPL : 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி ..!

இதனால் இரண்டாம் நாளின் முதல் செஷனில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டையும் இழந்து 353 ரன்கள் எடுத்தது.  அதன் பின் தங்களுக்கான முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கிற்கு களமிறங்கியது இந்திய அணி. இங்கிலாந்து அணியின் இளம் சூழல் பந்து வீச்சாளரான சோயப் பஷீரின் சூழலில் இந்திய அணி தடுமாறியது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்-விக்கெட் கீப்பரான துருவ் ஜுரேல் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளித்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார்.

அவர் 90 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்து, 46 ரன்கள் பின்தங்கியும் இருந்தது. இரண்டாம் இன்னிங்ஸ்க்கு களமிறங்கிய இங்கிலாந்து அணியை, இந்திய அணியின் அஸ்வினும், குலதீப்பும் அவர்களது சூழல் திறமையால் சுருட்டினார்கள். இதனால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளும் இழந்து வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Read More :- #LaLiga 2024 : லூகா மோட்ரிச் அதிரடியால் ரியல் மாட்ரிட் அணி வெற்றி ..!

இதனால் இந்திய அணிக்கு இலக்காக 192 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின் இரண்டாம் இன்னிங்ஸ்க்கு பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியது. அரை சதம் விளாசிய ரோஹித்தும் அவுட் ஆக ஒரு கட்டத்திற்கு மேல் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 120 ரன்கள் இருந்த போது 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி சரிவில் இருந்தது. பிறகு களத்தில் இருந்த கில்லும், ஜுரேலும் கூட்டணி அமைத்து சரிவிலிருந்து அணியை மீட்டனர்.

ஷுப்மான் கில் 124 பந்துகளில் 52 ரன்களும், துருவ் ஜுரேல் 77 பந்துகளில் 39 ரன்களும் எடுத்து அசத்தினார். இவர்களது நிதான ஆட்டத்தால் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது வருகிற மார்ச்-7 ம் தேதி தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்