PMK : 40 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் வாக்குறுதிகளை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, பாஜக தலைமையிலான கூட்டணியில் தேர்தலை சந்திக்கிறது. பாஜக கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அன்புமணி தர்மபுரியிலும், இயக்குனர் தங்கர்பச்சான் கடலூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் நிறைவு செய்யப்பட்டதை அடுத்து, தற்போது பாமகவின் தேர்தல் வாக்குறுதிகளை பாமக […]
Election2024 : பாஜக தலையிலான தேசிய ஜனநாயக கூட்டனியில் (NDA) தமிழகத்தில் இருந்து முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியாக பாமக உள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. தற்போது அந்த 10 தொகுதிகளில் 9 மக்களவை தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி வெளியான பாமக வேட்பாளர் பட்டியல் விவரங்கள் இதோ…. திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா. அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு, பி.காம்., பி.எல். […]
Anbumani Ramadoss : மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் முதல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எல்.முருகன், சரத்குமார் உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள், டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். Read More – 400 தொகுதிகளுக்கு மேல் வெல்வதே இலக்கு… பிரதமர் மோடி உரை! இந்த பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் […]
PMK – BJP : தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அட்டவணை வெளியானதை தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து, தேர்தலுக்கு தயாராக இருக்கிறது. Read More – தேர்தலுக்கு திமுக கூட்டணி தயார்.! எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்.? முழு விவரம் இதோ… ஆனால், […]
ADMK-PMK : வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் என தேதி அறிவிக்கபட்ட பின்னரும் கொங்கு மண்டலத்தில் பிரதான கட்சியாக இருக்கும் பாமக இன்னும் தங்கள் தேர்தல் கூட்டணி நிலைப்பாட்டை இறுதி செய்யாமல் இருந்து வருகிறது. திமுக அதன் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி உடன்பாடை இறுதி செய்துவிட்டது. இன்னும் சில தினங்களில் திமுகவுக்கு என்னென்ன தொகுதிகள், கூட்டணி கட்சிகளுக்கு என்னென்ன தொகுதிகள் , யார் வேட்பாளர்கள் என்ற விவரங்கள் வெளியாகிவிடும். Read More […]
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சாயத்து தலைவருக்கு கூட சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க சட்டத்தில் அதிகாரம் உள்ளது. பஞ்சாயத்து தலைவருக்கே உரிமை இருக்கும்போது முதல்வருக்கு இல்லையா..? என கேள்வி எழுப்பினார். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. சட்டங்களுக்கு எதிராகவும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், காவிரி நடுவர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான செயல்பாடுகளில் கர்நாடக அரசு ஈடுபட்டு […]
பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கம் இன்று சிதம்பரத்தில் நடைபெற்றது. இதில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், மூமுக தலைவா் ஸ்ரீதா் வாண்டையாா் ஆகியோா் பங்கேற்றனர். இந்த கருத்தரங்க கூட்டத்தில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 2,000 ஆண்டுகளாக, ஜாதியை வைத்துதான் அடக்குமுறை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை என்றால் மிகப்பெரிய […]
இன்று கோயம்புத்தூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சமூக நீதி காக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு, சாதிவாரி கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தையும், அதனை தமிழக அரசு விரைந்து நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவர் பேசுகையில், தமிழக மக்களுக்கு சமூகநீதி வேண்டும். எங்களுக்கு மட்டும் சமூக நீதி எனும் சாப்பாடு கிடைத்தால் போதாது. அல்லது எங்களை சார்ந்தவர்களுக்கு மட்டும் […]
சரியாக மழை முன்னெச்சரிக்கையை அறிவிக்காத சென்னை வானிலை ஆய்வு மைய அலுவலகத்தை பூட்டி விடலாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்து உள்ளார். முன்னதாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. அதேபோல அடுத்ததாக தென்தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் அந்த மாவட்டத்தில் பெரும்பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. மழை பாதிப்பின் […]
பீகார் மாநிலத்தை போலவே தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ஐய்யா ராமதாஸ் அவர்கள் 40 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறார். இதுதொடர்பாக ஆயிரக்கணக்கான போராட்டங்கள், அழுத்தங்கள், அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி எம்ஜிஆர், ஜானகி, ஆளுநர் ஆட்சி பிசி அலெக்ஸாண்டர், கலைஞர், ஜெயலலிதா மற்றும் […]
உழவர்கள் தான் நான் வணங்கும் கடவுள் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். இன்று தேசிய உழவர் தினம் அனுசரிக்கப்படும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில்,’உழவர்கள் தான் நான் வணங்கும் கடவுள். தேசிய உழவர் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் உழவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்; உழவர்களின் கண்ணீரை துடைப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். உழவர்கள் உள்ளம் மகிழ்ச்சியில் நிறைய வேண்டும். அதற்காக பாமக போராடும்! என […]
ஜேஇஇ தேர்வு விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மார்க் குறிப்பிடுவதில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை அன்புமணி ராமதாஸ் கோரிக்கை. ஜேஇஇ தேர்வு விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மார்க் குறிப்பிடுவதில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மார்க் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டதால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டு ஆண்டுக்கு முன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு மார்க் வழங்கப்படாததையும் சுட்டிக்காட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆவின் பொருட்கள் விலை உயர்வுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம். ஆவின் பால் விலை தொடர்ந்து நெய் விலை தற்போது வெண்ணெய் விலையை உயர்த்தி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு அரசியல் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் ஆவின் வெண்ணெய் விலை அரை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 100 கிராமுக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டிருக்கிறது. நெய் விலை நேற்று […]
சாதிக்க வேண்டியவர்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது ஆன்லைன் ரம்மி என அன்புமணி ராமதாஸ் ட்விட். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி விட்டதுடன் கடமை முடிந்து விட்டதாக நினைத்து அரசு அமைதியாக வேடிக்கை பார்க்கக் கூடாது. ஆளுனரின் ஒப்புதலை பெறுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘ஆன்லைன் சூதாட்டம் என்ற கொடிய அரக்கனின் கோரத் தாண்டவத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு பொழுதும் ஓர் உயிர் பலியுடன் தான் […]
என்எல்சிக்கு நிலம் தர முடியாது என நெய்வேலி பகுதி மக்கள் கூறிய நிலையில், ஆதிகாரிகள் மக்களை மிரட்டி நிலங்களை பறிக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் ட்வீட். அந்த ட்விட்டர் பதில், என்எல்சிக்கு நிலம் தர முடியாது என நெய்வேலி பகுதி மக்கள் திட்டவட்டமாக கூறி விட்ட நிலையில், சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு அதிகாரிகளையும், காவல்துறையினரையும் அனுப்பி, மக்களை மிரட்டி நிலங்களை பறிக்கும் முயற்சியில் கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது! என்எல்சிக்காக அரசு கையகப்படுத்தத் […]
தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80% வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் சட்டத்தை வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஓசூர் அருகே அமைக்கப்பட்டு வரும் டாட்டா எலெக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் வெளிமாநிலத்தவருக்கு குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்தவருக்கு அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. இது குறித்த […]
தமிழகத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அது போக மீதி விழுக்காடு பொது பிரிவு (இடஒதுக்கீடு இல்லாத பிரிவு) என ஒதுக்கப்பட்டு வருகிறது. அதனை உயர்த்தி 90-100 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வரவேண்டும். – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல். இடஒதுக்கீடு குறித்து பாமக தலைவருமான மாநிலங்களைவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். அவர் கூறுகையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் இடஒதுக்கீட்டை 81 விழுக்காடு உயர்த்தியுள்ளார். அது வரவேற்க்கதாக்கது. அதில், […]
மழை நீர் தேங்கி ஆறு போல காட்சியளிக்கின்றன. இது மிகவும் ஆபத்தானது என அன்புமணி ட்வீட். சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பெரும்பாலான பள்ளங்களில் இன்னும் பணிகள் நிறைவடையவில்லை என்றும், இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பெரும்பாலான பள்ளங்களில் இன்னும் பணிகள் நிறைவடையாததால், கடந்த சில நாட்களில் பெய்த மழை நீர் தேங்கி அவை ஆறு […]
ஆளுநர் மாளிகை பொருட்படுத்தாதது தான் இன்னொரு இளைஞரின் உயிரிழப்புக்கு காரணமாகியிருக்கிறது என அன்புமணி ராமதாஸ் ட்வீட். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,’திருச்சி மாவட்டம் மலையாண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது […]
தேவையான மருந்துகளை கோருவதை தவிர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களால் எதுவும் செய்ய முடியாது என அன்புமணி ராமதாஸ் ட்வீட். வேலூர் மாவட்டம் பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புக்கடி மருந்து இல்லை, எக்ஸ்-ரே கருவி பழுது, கட்டிடம் பாழடைந்துள்ளது என்று கூறி, அங்கு பணியாற்றி வந்த இரு மருத்துவர்களை மருத்துவ அமைச்சர் பணியிட மாற்றம் ஏற்க தகுந்ததல்ல என அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘வேலூர் மாவட்டம் பொன்னை ஆரம்ப சுகாதார […]