கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்தது. பாகிஸ்தானில் விழுந்த ஏவுகணை தற்செயலாக வீசப்பட்டதாகவும், வழக்கமான பராமரிப்பின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் நடந்ததாக இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பாகிஸ்தானில் விழுந்த ஏவுகணை குறித்து மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் விளக்கமளித்தார். அதில், கடந்த 9ஆம் தேதி ராஜஸ்தானில் நிலைநிறுத்தப்பட்ட ஏவுகணை வழக்கமான பராமரிப்பு மற்றும் ஆய்வின் போது காலை 7 மணியளவில் ஒரு ஏவுகணை தவறுதலாக சீறிப்பாய்ந்தது. அந்த ஏவுகணை பாகிஸ்தானின் […]
காஷ்மீர் மாநிலத்தில் சண்டைநிறுத்தம் நீட்டிப்பு இல்லை என்றும், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் எனவும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ரம்ஜான் மாதத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த முடிவெடுத்ததற்கு, காஷ்மீர் மக்கள் மீதான அன்பும், அக்கறையுமே காரணம் என்று குறிப்பிட்டார். ரம்ஜான் நேன்பை அமைதியாக கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக அமைதியான சூழல் உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதனிடையே, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடர […]
பாதுகாப்பு மற்றும் அமைதி நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக ஜம்மு – காஷ்மீருக்கு சென்றுள்ளார். ரம்ஜான் நோன்பு தொடங்கியதை அடுத்து, ஜம்மு – காஷ்மீரில் கடந்த மாதம் 16 ஆம் தேதி முதல் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வரும் ஜூன் 28 ஆம் தேதி அமர்நாத் யாத்திரையும் தொடங்க இருக்கிறது. இதனால், பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை, ஜூன் 15 ஆம் […]