மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில், பதவி ஏற்ற உடனேயே அவர் செய்துள்ள நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக பதிவாளர் திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதில் 10 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தனர். அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் துணை வேந்தர்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர். இந்த பல்கலைக்கழகங்களுக்கு […]