மகளிர் டி-20 உலக கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.இதனால் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலிய அணி.
கடந்த மாத தொடக்கத்தில் ஜப்பானில் இருந்து டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் வந்தது.இதில் 164 ஆஸ்திரேலியர்களில் இருவருக்கு கொவிட்-19 வைரஸ் இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து கப்பலில் வந்த அனைவரும் ஆஸ்திரேலியாவின் சர் சார்லஸ் கெய்ட்னர் அரசு மருத்துவமனையில் சிறப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 78 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் கொவிட்-19 வைரஸ் […]
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் தனக்கு கிடைத்த ரூ.3 கோடியே 40 லட்சம் நன்கொடையை தொண்டு நிறுவனத்துக்கு வழங்க போவதாக சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயது குவாடன் சிறுவனை குள்ளத்தன்மையால் கேலி கிண்டலுக்கு உள்ளான சிறுவன், மனமுடைந்து தனது தாயிடம் தற்கொலை செய்யப்போவதாக கதறி அழும் வீடியோ உலகையே உலுக்கி சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. அப்போது அந்த சிறுவனுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் லட்சக்கணக்கானோர் இணையத்தில் கருத்து பதிவிட்டர். இந்த நிலையில் அமெரிக்க […]
ஆஸ்திரேலியாவில் பயணிகள் ரயில் தடம்புரண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். இதில் பயணித்த ஏராளமான பயணிகள் காயமடைந்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து சுமார் 160 பயணிகளுடன் மெல்போர்ன் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தபோது வாலன் என்ற பகுதியில் ரயில் வந்தபோது, திடீரென என்ஜின் உட்பட 5 பெட்டிகளும் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டது. இதில் ரயில் ஓட்டுநரும், அவரது உதவியாளரும் என 2 பேரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் தடம்புரண்ட பெட்டிகளில் இருந்த […]
இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில், 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை மூனே, 54 பந்துகளில் […]
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையே முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இந்திய மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் கான்பெரா மைதானத்தில் இன்று நடைபெற்ற 3-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையே முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா […]
ஆஸ்திரேலியாவில் காட்டு தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே, காட்டத்தீயின் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, அவர் தலையில் அணிந்து விளையாடிய தொப்பி ரூ.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன். இவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 145 டெஸ்டில் பங்கேற்று 708 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இலங்கை சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கு (800 விக்கெட்) […]
தெற்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் உள்ள ஃபெரல்வகை ஒட்டகங்கள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து அவர்கள் பயன்படுத்தும் தண்ணீரை ஒட்டகங்கள் குடித்து விடுகின்றனர். சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் அதிகமாக ஃபெரல்வகை ஒட்டகங்கள் காணப்படுகிறது. இந்த ஒட்டகங்கள் அதிகமாக தண்ணீர் குடித்து அங்கு வாழும் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அந்நாட்டு அரசு முடிவு எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த பகுதியில் […]
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டு தீயின் காரணமாக கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியுள்ளது.இதனால் ஒட்டகங்கள் தண்ணீர் தேடி வருகின்றன. வீட்டை சுற்றியுள்ள பகுதிகளை சேதப்படுத்துவதன் காரணமாக ஒட்டகங்களை கொல்ல அப்பகுதி மக்கள் முடிவெடுத்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயின் காரணமாக கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக ஏராளமான ஒட்டகங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து தண்ணீரை குடித்து செல்வதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டின் வேலியை உடைப்பது மட்டுமில்லாமல் ஏ.சியில் வழியும் நீரை குடிப்பதற்காக வீடுகளை சுற்றிச் சுற்றிவந்து இடையூறு […]
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. 40 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெப்பம், குறைவான ஈரப்பதம், பலத்த காற்று, இவைதான் இப்போதைய சூழலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனை அணைக்க ஏறத்தாழ 3000 தீயணைப்பு வீரர்கள் களத்தில் ஈடுபட்டு தீயை அணைக்க […]
மார்னஸ் கடந்த 7 இன்னிங்சில் 4 சதம் அடித்து அசத்தி உள்ளார். இதற்கு முன் ரிக்கிபாண்டிங் , டான் பிராட்மேன் ஆகியோர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து சாதனை படைத்தது உள்ளனர். நியூசிலாந்து அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் […]
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது 5 நாட்கள் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4 நாள்களாக குறைப்பது கேலிக்கூத்தானது எனக் கூறியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது 5 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த 5 நாள் போட்டியை வருங்காலத்தில் 4 நாள் கொண்ட போட்டியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மாற்ற உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த முடிவிற்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய கிரிக்கெட் வாரியங்கள் எதிர்ப்பு தெரிவித்து […]
ஆஸ்திரேலியாவின் சமீபத்தில் நியூ சௌத் வேல்ஸில் காட்டுத் தீ ஏற்பட்டு, பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. பின்னர் அதிலிருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் விக்டோரியா கடற்கரையில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் சமீபத்தில் நியூ சௌத் வேல்ஸில் காட்டுத் தீ ஏற்பட்டு, பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. பின்னர் அதிலிருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் விக்டோரியா கடற்கரையில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். காட்டுத் தீயை அணைக்க நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களின் கடற்கரையோரப் பகுதிகளுக்கு ராணுவ விமானங்கள் […]
இந்திய அணி அடுத்தமாதம் (ஜனவரி ) இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடர்களில் விளையாட உள்ளனர். இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பும்ரா மற்றும் தவான் ஆகியோருக்கு இடம் கிடைத்தது. இந்திய அணி, நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில், இந்திய அணி ஜனவரி மாதம் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாட உள்ளனர். […]
ஆஸ்ரேலியாவில் இருக்கும் ஒருவர் அடுப்பின்றி தனது காரில் பன்றி இறைச்சியை ஒருவர் சமைத்த ருசிகர சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. நகைச்சுவையுடன் இந்த பதிவை பலரும் பகிர்ந்தும், வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளுமாறு அறிவுரை கூறியும் வருகிறார்கள். ஆஸ்ரேலியாவில் உள்ள பெர்த் (Perth) நகரத்தில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிப்பதால் ஸ்டு பெங்கெல்லி (Stu Pengelly) என்பவர் பகலில் அவரது காரின் இருக்கையில் சமைக்காத பன்றிக் கறி வைத்ததாகவும், அதை 10 மணி நேரத்துக்கு பின் சென்று பார்த்தப் […]
நெருப்பு பிழம்பாக காட்சியளிக்கும் ப்ளூ மவுண்டைன்ஸ் பகுதி. இந்தத் தீயில் இதுவரை 10 லட்சம் ஹெக்டேர் பரப்பில் மரங்கள், செடி கொடி, மற்றும் 400க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பல். ஆஸ்திரேலியாவின் ப்ளூ மவுண்டைன்ஸ் பகுதியில் பல அடி உயரமுள்ள மரங்கள் தீப்பிடித்து எரிந்து வருவதால் அப்பகுதியே நெருப்பு பிழம்பாக காட்சியளிக்கிறது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட புதர் தீ படிப்படியாக அருகில் இருக்கும் பகுதிக்கும் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தத் தீயில் […]
உலக கோப்பை டி-20 போட்டி 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. வேகப்பந்து வீச்சிற்கு இன்னும் ஒரு வீரர் மட்டும் தேவைப்படுகிறார் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். 7 வது உலக கோப்பை டி-20 போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.அடுத்த வருடம் அக்டோபர் மாதம் 8 ஆம் தொடங்கும் போட்டி நவம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதற்காக உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றான இந்திய அணியும் முழுவீச்சில் தயாராகி வருகிறது.இதற்கு முன்னோட்டமாக இந்திய அணி டி-20 போட்டிகளில் […]
கடந்த நவம்பர் 3-ம் தேதி பாக்கிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டி விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 21-ம் தேதி தொடங்கியது. அதில் ஆஸ்திரேலியா அணி அபாரமாக விளையாடி முதல் போட்டியை கைப்பற்றியது. நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட் மைதானத்தில் விளையாடினர். அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. டேவிட் வார்னரும், பர்னிஸும் தொடக்க ஆட்டக்காரர்களான களமிறங்கினார்கள் அப்ரிடி பந்து […]
இந்தியா,பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 14-ம் தேதி தொடங்கி நேற்று முடிந்தது.இப்போட்டி இந்தூரில் நடைபெற்றது.முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பான பந்துவீச்சால் இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய &பாகிஸ்தான் அணியின் சாதனையை சமன் செய்து உள்ளது. இந்திய அணி இந்த வருடம் தென் ஆப்ரிக்க அணிக்கு […]
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள மோசமான காட்டுத் தீ பருவங்கள் வரிசையில் தற்போதைய காட்டுத்தீயும் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாட்டின் சில பகுதிகளில் கடும் வறட்சியும் நிலவி வருகிறது.ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் குறைந்தது 2 பேர் மரணம் அடைந்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனம் ஒன்றிலிருந்து ஒரு சடலம் மீட்கப்பட்டதாகவும் சுவாசிக்க சிரமம் பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பெறும்போது மரணம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். மேலும் இருவரைக் காணவில்லை.சுமார் 100 வீடுகள் தீயில் கடும் சேதமடைந்தன. […]