அதிமுகவில் இருந்து மேலும் 6 பேரை நீக்கி முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் உள்ளவர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், சிலர் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்கள். இதன்பின் அதிமுக அவர்களை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கியது. இதுபோன்று கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈடுபடுபவர்கள் மீது ஓபிஎஸ், இபிஎஸ் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது ஒரே நேரத்தில் […]
திமுகவினருக்கு மக்கள் தேர்தல் மூலம் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி பெண்களை மிகவும் கீழ்த்தரமாக கொச்சைப்படுத்தி பேசுவதாக கூறி, தேர்தல் பரப்புரைகளில் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக பேசும் திமுகவினருக்கு மக்கள் தேர்தல் மூலம் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதுபோன்று பெண்களை தரக்குறைவாக பேசும் பேச்சாளர்களை எல்லாம் தட்டி கேட்க தைரியம் இல்லாத […]
முதல்வர் பழனிசாமி குறித்த விமர்சனத்திற்காக மன்னிப்பு கோருகிறேன் என திமுக எம்பி ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார். திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா, சமீபத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, முதல்வர் பழனிசாமி குறித்து தரக்குறைவாக பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆ.ராசாவின் பேச்சுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தன. அதிமுக தரப்பிலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதனிடையே, தேர்தல் நடத்தை விதிமுறைகளை […]
முதல்வர் நெல்லை செல்லும் வழியில் மனித உரிமை காக்கும் கட்சி சார்பாக கருப்புக்கொடி காட்ட முயற்சி செய்த 6 பேர் கைது. நெல்லை மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இதனை முடித்த பிறகு நாங்குநேரி பிரச்சாரத்திக்கு சென்றபோது அங்குள்ள சுங்கச்சாவடி அருகே முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கறுப்புக் கொடி காட்ட முயன்ற பெண் ஒருவர் உட்பட 6 பேரை காவல்துறை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். சீர் மரப்பினரருக்கு இடஒதுக்கீடு […]
இவற்றைப் படித்தால் வாய் கொள்ளாத சிரிப்பு வருகிறது என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இவற்றைப் படித்தால் வாய் கொள்ளாத சிரிப்பு வருகிறது என்று கூறி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னார், மோடி எனக்குப் பல விஷயங்களைக் கற்றுத் தந்தார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும் வேளாண் சட்டங்களையும் எப்படி ஆதரிப்பது என்று கற்றுத் தந்தாரா? ஓபிஎஸ் சொன்னார், […]
அதிமுக – பாஜக கூட்டணியை எதிர்த்து ஒருமனதாக தமிழக வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என ப.சிதம்பரம் வேண்டுகோள். ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா வெளிநடப்பு செய்திருந்தது. 13வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் மாகாண கவின்சில்களுக்கான தேர்தலை உடனடியாக நடத்த இலங்கை அரசுக்கு இந்தியா வலியுறுத்தியிருந்தது. இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்காமல் […]
ஏப்ரல் 2ம் தேதி மதுரையில் நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு. ஏப்ரல் 2ம் தேதி மதுரையில் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே மேடையில் பரப்புரை மேற்கொள்கின்றனர். அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி பங்கேற்கும் பரப்புரை கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது. இதனிடையே, […]
முதல்வர் சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சீமானின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ல் தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்து பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யகோரிய மனுவை கடந்த ஆண்டே சீமான் வாபஸ் பெற்றதால் தற்போது வழக்கு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசின் விளக்கத்தை ஏற்று சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் என்பது […]
கட்சிக்கு முரணான வகையில் செயல்பட்டதால் மூன்று பேரை அதிமுகவில் இருந்து நீக்கி முதல்வர், துணை முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கொள்கை, குறிக்கோளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத்தொகுதில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள காரணத்தாலும், மதுரை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த ச.கிரம்மர் சுரேஷ், […]
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி 122 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பிரபல ஊடகங்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் தங்களது தேர்தல் கருத்து கணிப்பை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், அதிமுக கூட்டணி சட்டப்பேரவை தேர்தலில் சுமார் 122 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கும் […]
நான் உழைத்து அரசியலுக்கு வந்துள்ளேன், ஸ்டாலின் போல் எந்த உழைப்பும் இல்லாமல் பொறுப்புக்கு வரவில்லை என பரப்புரையில் முதல்வர் பேசியுள்ளார். தருமபுரி, பாலக்கோட்டில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் கே.பி.அன்பழகனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதல்வர், இது வரும் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் கூட்டம் அல்ல, வெற்றி விழா கூட்டம்போல் காட்சியளிக்கிறது. இவ்வளவு மக்கள் சக்தி பெற்ற கட்சியை தொடர்ந்து தரக்குறைவாக ஸ்டாலின் பேசி வருகிறார் என குற்றசாட்டியுள்ளார். இந்த தேர்தலோடு […]
திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களோடு மக்களாக இருக்கக் கூடிய இயக்கம் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சட்டப்பேரவை தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் முக ஸ்டாலின், நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் விடும் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு முதல்வர் பழனிசாமி ஏன் செல்லவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். உறவினருக்கு டெண்டர் கொடுத்ததற்கு முகாந்திரம் உள்ளதாக நீதிமன்றம் கூறியது என்றும் தெரிவித்தார். திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களோடு மக்களாக இருக்கக் கூடிய […]
சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த சேந்தமங்கள் எம்எல்ஏ சந்திரசேகரன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு. சேந்தமங்கலம் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன் சுயேட்சையாக போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். கொல்லிமலை பகுதியை உள்ளடக்கிய சேந்தமங்கலம், தமிழகத்தின் 2 பழங்குடியின தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியில் தற்போது அதிமுக எம்எல்ஏவாக இருக்கும் சந்திரசேகரனுக்கு மீண்டும் போட்டியிட அதிமுக வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், அவர் சுயேட்சையாக அந்த தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், […]
ஜெயலலிதா மரணத்திற்கு திமுக போட்ட வழக்கு தான் காரணம் என்பது திட்டமிட்ட பொய் என ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதியிடம் ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுக தான் காரணம் என முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் கூறி வருவதை குறித்த கேள்விக்கு, ஜெயலலிதா மரணத்திற்கு திமுக போட்ட வழக்கு தான் காரணம் என்பது திட்டமிட்ட பொய் என கூறியுள்ளார். ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்கில் திமுக மேல்முறையீடு செய்யவில்லை […]
விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி வாக்கு சேகரித்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரை ஆதரித்து, முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய முதல்வர், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும், சாதனைகளையும் பட்டியலிட்டு பேசினார். பொங்கலுக்கு ரூ.2,000 ரொக்கம் கொடுத்தது அதிமுக அரசுதான். திமுக ஆட்சியில் இருக்கும்போது என்ன செய்தார்கள், ஒரு ரூபாய் கூட வழங்கியதாக சரித்திரம் கிடையாது என விமர்சித்தார். விராலிமலை தொகுதியில் […]
எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் பழனிசாமியின் சொத்து மதிப்பு ரூ.1 கோடி குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் 7வது முறையாக போட்டியிடுவதற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று மதியம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வேட்பு மனுவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். வேட்புமனு தாக்கல் செய்யும் போது தங்களின் சொத்து விவரங்களை குறிப்பிட வேண்டியது கட்டாயம். அந்த வகையில், இன்று முதல்வர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் […]
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பக்குவம் பழனிசாமியிடம் இல்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜகாந்த், கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் திமுதிகவிற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா 41 தொகுதிகள் ஒதுக்கி, அமோக வெற்றி பெற்று ஆளும் கட்சி, எதிர் கட்சியாக அதிமுக, தேமுதிக இருந்தது. இப்போது உள்ள முதல்வர் பழனிசாமி, தேசிய ஜனநாயக கூட்டணி வழியாகத்தான் தேமுதிகவிடம் கூட்டணிக்கு வந்தார்கள். […]
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று மாலை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீசெல்வம் வெளியிடுகின்றனர். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடு பிடித்ததால், தொகுதி பங்கீடு முடிந்து, வேட்பாளர் பட்டியல் மற்றும் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன் தினம் அமமுகவும், நேற்று திமுகவும் அவர்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இந்நிலையில், ஆளும் கட்சியான அதிமுக தொகுதி பங்கீட்டை முடித்ததை தொடர்ந்து இரண்டு கட்டங்களாக 177 பேர் […]
தேர்தல் கருத்து கணிப்பு எல்லாம் தவறு, வரும் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெரும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் கூட்டணி கட்சிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்திய பின்னர் ஓமலூரில் செய்தியாளர்களிட பேசிய முதல்வர் பழனிசாமி, அதிமுகவை பொறுத்தளவில் நீட் தேர்வு தமிழகத்தில் இருக்கக் கூடாது என்று தான் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் கிடையாது. அதிமுக பேட்பாளர்களுக்கு சில இடங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனை சரி செய்யப்படும் என தெரிவித்தார். திமுகவின் தேர்தல் அறிக்கையை […]
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 129 தொகுதிகளில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக போட்டியிடுகின்றன. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனல் பறக்க தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணி, தொகுதி பங்கீட்டை முடித்து, வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று 173 பேர் கொண்ட திமுக வேட்பாளர்கள் பட்டியலை முக ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டிருந்தார். இதனிடையே, கடந்த 5-ம் தேதி முதல்வர் எடப்பாடி […]