தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களில் ஒருவரான சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய விண்வெளித்துறை அமைச்சர் ஜிகேந்திர சிங் பதிலளிக்கையில், தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது. என தெரிவித்தார். இந்தியாவில் ஏற்கனவே ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.