கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் அந்நோய் தாக்காது என்பதற்கான ஆதாரம் இதுவரை இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அப்படி இருக்கும்போதும் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதுவரை உலகளவில் 29,23,783 பேர் பாதிக்கப்பட்டு, 2,03,319 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 8,37,611 பேர் குணமடைந்து உள்ளார்கள் என்பது […]
சேலம் அரசு மருத்துவமனையில் உலக சுகாதார அமைப்பு குழுவினர் ஆய்வு. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றானது தொடர்ந்து மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து, இந்தியாவிலும் இந்த நோயினால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் உலக சுகாதார அமைப்பு குழுவினர் ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர். மேலும், கொரோனா பாதித்த நபர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் […]
கொரோனா வைரஸ் மோசமானது, அதன் விளைவை இனிமே தான் சந்திக்க போகிறோம் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனா உஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் சுமார் 200 நாடுகளை மிரட்டி வருகிறது. இதனால் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இருந்தாலும் வைரஸில் தாக்கம் குறையாமல் உயர்ந்துகொண்டே […]
உலகம் முழுவதுமே தற்போது கொரோனா அச்சத்தில் உள்ள நிலையில், பல நாடுகளில் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதில் அமெரிக்கா முதலிடம், ஏனென்றால் நேற்று மற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் உலக சுகாதார மைப்பினர் மீது குற்றசாட்டை விடுத்துள்ளார். அதாவது, டிசம்பர் மாதத்திலேயே தைவான் விஞ்சானிகள் கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பாரா பரவுவது என கூறிய பின்பும், உரிய நடவடிக்கை எடுக்காமல் உலக சுகாதார அமைப்பு இருந்தது […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவதால், இதனை கட்டுப்படுத்த அனைத்து நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த, பல வதந்தியான செய்திகளும் சமூக வலைத்தளங்களில் உலா வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் கோவிட்-19 தொடர்பாக 18 மில்லியன் malware and phishing மின்னஞ்சல்களை பார்த்ததாக கூகுள் தெரிவித்துள்ளது. தினமும் 240 மில்லியன் ஸ்பாம் மின்னஞ்சல் உருவாவதாக கூகுள் தெரிவித்துள்ளது. இதில் 99.9 சதவீத போலி மின்னஞ்சல்களை […]
உலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் அது கவலை அளிப்பதாக அந்த அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசால் உலகம் முழுவதும் தினமும் பலர் பாதிக்கப்பட்டு , உயிரிழந்து வருகின்றனர்.இதற்குஇடையில் உலக சுகாதார அமைப்பிற்க்கு வழக்கும் நிதியை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தி வைத்தார். கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளை மூடி மறைத்து தனது கடமைகளில் இருந்து உலக சுகாதார அமைப்பு விலக்கியதாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டினார் . சீனாவிற்கு ஆதரவாக […]
உலகம் முழுக்க கொரோன வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அமெரிக்காவில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. இந்த கொரோனா விவகாரம் தொடர்பாக உலக சுகாதார அமைப்பிற்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், உலக சுகாதார அமைப்பிற்கு கொடுக்கவேண்டிய நிதியை ட்ரம்ப் தர மறுத்துள்ளார். இதுகுறித்து, ட்ரம்ப் பேசுகையில், ‘ அமெரிக்க அளிக்கும் நிதியின் மூலம் உலக சுகாதார நிறுவனம் நல்ல பலன்களை […]
உலக முழுவதும் 22 ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி கொரோனா வைரஸ் கொத்துக்கொத்தாக உயிர்களை கொன்று தீர்த்து வருகிறது. கொரோனா வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற அனைத்து நாடுகளை சேர்ந்த மருத்துவத் துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அனைத்து மருத்துவத்துறை ஊழியர்களும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக தன்னலமற்ற சேவையாற்றி வருகின்றனர். […]
உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், செய்தியளர்களை சந்தித்து பேசினார். அப்போது அமெரிக்கா அதிபர் ட்ரம்புக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, உலக சுகாதார அமைப்பு எந்த நாட்டுக்கும் ஆதரவாக செயல்படவில்லை என்றும் கொரோனா வைரஸை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்துள்ளார். நீங்கள் அதிகமான சவப்பெட்டிகளை உங்கள் தோளில் சுமக்க விரும்பவில்லையென்றால், கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள் என் கூறினார். மேலும் இது நெருப்புடன் விளையாடும் விளையாட்டு என்றும் […]
உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால், அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஈரான் போன்ற நாடுகளில் பாதிப்பும், பலியும் உயர்ந்துகொண்டே செல்கிறது. உலகிலேயே அமெரிக்காவில் தான் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கொரோனாவின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது வைரஸ் அசுர வேகத்தில் பரவத் தொடங்கியதும் சுகாதார நடவடிக்கைகளை மேலும் […]
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வரும் ஏப்ரல் 14-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. பொதுமக்களும் மெல்ல மெல்ல தங்கள் இயல்பு வாழ்க்கை திரும்பும் என நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது. அதில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது போல ஓர் அறிக்கை வெளியானது. அதில், இது முதற்கட்ட ஊரடங்கு அதன் பின்னர் சிறுது நாள் ஓய்வு விட்டு மீண்டும், […]
உலகம் முழுவதும் தனது மின்னல் வேகத் தொற்றுக் காரணமாக பொதுமக்களை வாட்டி வதைத்து உயிர்களை காவு வாங்கி வரும் கொடூர கொரோனாவிற்கு உலக நாடுகளே சீர் குலைந்து கிடக்கிறது.இதன் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.அவ்வாறு தற்போது வரை உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இதற்கு இடையில் ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் உலக […]
உலக சுகாதார அமைப்பு(WHO) உலக அளவில் மனித இனத்தை அச்சுறுத்துக்கூடிய உயிர்கொல்லி நோயாக டிசீஸ் எக்ஸ் என்ற பெயர் தெரியாத புதிய நோய் பரவலாம் என்று கடுமையாக எச்சரித்துள்ளது. இதுவரை அந்த நோயின் தீவிரத்தையும், எதிர்ப்பு மருந்துகளையும் கண்டுபிடிக்காத நிலையில், இதற்கு டிசீஸ் எக்ஸ் என்று நார்வே நாட்டின் அறிவியல் அறிஞர்கள் பெயரிட்டுள்ளனர். எதிர்காலத்தில் மனித இனத்தை அச்சுறுத்தும் நோயாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார அமைப்பு மனித சமூகத்தை […]