அசுர வளர்ச்சியில் AI..’க்ரோக் 3’யை களமிறக்கிய எலான் மஸ்க்!

எக்ஸ் வலைத்தளத்தில் உள்ள க்ரோக் ai தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இனிமேல் நீங்கள் எழுதியதை வீடியோவாக மாற்ற முடியும் அம்சம் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

elon musk

டெல்லி : எக்ஸ் வலைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் ட்வீட்டரை (எக்ஸ்) வாங்கியதில் இருந்து பல அதிரடியான மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக, தற்போது அதிகமாக வளர்ச்சி அடைந்து வரும் AI  தொழில் நுட்பத்தையும் எக்ஸ் வலைத்தளத்திற்குள் க்ரோக் என்கிற பெயரில் கொண்டு வந்தார்.  முதற்கட்டமாக க்ரோக் 1 என்கிற முதல் மாடலை 2023 நவம்பர் மாதம் கொன்டு வந்தார்.

அந்த மாடல் செயல்பாட்டில் இருந்த போது மற்ற AI தொழில் நுட்பங்கள் கொடுக்கும் தகவல், பிரபலங்களை பற்றிய விவரங்கள், எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் ஆகும் விஷயங்கள் என அனைத்தும் காண்பித்தது. ஆனால், புகைப்படங்களை உருவாக்கம் செய்துகொள்ளும் வசதி இல்லை. எனவே, இந்த வசதியும் வந்தால் நன்றாக இருக்கும் என பயனர்கள் எதிர்பார்த்தனர்.

பயனர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், அடுத்ததாக க்ரோக் 2 என்கிற மாடலில் அந்த வசதியை கொண்டு வந்தார். அத்துடன் முதல் மாடலை விட கேட்கும் கேள்விகளுக்கு வேகமாக பதிலை கொடுத்தது. இதன் காரணமாக பயனர்கள் பலரும் சாட்ஜிபிடி அளவுக்கு க்ரோக் 2 வை உபயோகம் செய்யவும் ஆரம்பித்தனர். எனவே, இதற்கு அமோக வரவேற்பை கிடைத்த காரணத்தால் அதற்கு அடுத்த மாடலான க்ரோக் 3-ஐ எலான் மஸ்க் கொண்டு வந்துள்ளார்.

அதன்படி,  க்ரோக் 3-ஐ (Grok 3) திங்கட்கிழமை, பசிபிக் நேரப்படி இரவு 8 மணிக்கு (இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை (இன்று) காலை 9:30 மணிக்கு) அறிமுகம் செய்யப்பட்டது.

என்னென்ன அம்சங்கள்

  • க்ரோக் 2 விட, க்ரோக் 3 இல் அதிகமான தகவல்கள் இருப்பதாகவும், கேட்கும் கேள்விகளுக்கு விரைவாக பதில் கொடுக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இது கூடுதல் தகவல்களை எளிதில் புரிந்து பதிலளிக்க முடியும்.
  • அதைப்போல, க்ரோக் 3 என்ன கேள்விகள் நீங்கள் கேட்கறீர்களோ அந்த கேள்விகளுக்கு தெளிவாக பதிலளிக்கும். குறிப்பாக நீங்கள்  ஆராய்ச்சி மற்றும் பற்றி விளக்கமாகப் கேட்டிறீர்கள் என்றால் அது உங்களுக்கு புரிய வைத்துக் கொள்ளும் திறன் கொண்டுள்ளது.
  • அதைப்போல, தொழில் நுட்பமான கேள்விகளுக்கும் பயனுள்ள பதில்கள் தரக்கூடிய திறன் இருக்கின்றது
  • மேலும், க்ரோக் 3 இல் நீங்கள் ஒரு பெரிய கட்டுரை எழுதி கொடுக்கிறீர்கள் என்றால் அந்த கட்டுரை சரியாக இருக்கிறதா என்று நீங்கள் பார்த்து கொள்ளலாம்.
  • உன்னோட உரையாடலை இயல்பான பேச்சுவார்த்தை போல நடத்த முடியும்.

முக்கிய அம்சம்? 

இதெல்லாம் மிஞ்சும் அளவுக்கு முக்கியமான அம்சமும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அது என்னவென்றால், நீங்கள் எழுதியதை வீடியோவாக மாற்ற முடியும். எனவே, இனிமேல் நீங்கள் எழுதி கொடுத்தாலே போதும் அது ai மூலம் உங்களுக்கு ஒரு வீடியோவாக எடிட் செய்து கொடுத்துவிடும் எனவும் கூறப்படுகிறது. இந்த அம்சம் குறித்து மட்டும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. செயல்பாட்டுக்கு வந்த பிறகு தான் இது உண்மையா என்பது தெரிய வரும். மேலும், இப்படியான பல அம்சங்களை கொண்ட க்ரோக் 3-ஐ மஸ்க் கொண்டு வந்துள்ளதால் பயனர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்