உலகின் மிக வயதான பெண் தனது 117வது வயதில் மரணம் அடைந்தார்!!

Default Image

ஜப்பான் நாட்டில் ககோஷிமா மாகாணத்திற்கு உட்பட்ட கிகாய் என்ற நகரில் வசித்து வந்தவர் நபி தஜிமா (வயது 117).  உலகின் மிக வயது முதிர்ந்த பெண்ணான இவருக்கு கடந்த ஜனவரியில் உடல் நல குறைவு ஏற்பட்டது.  இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்

கடந்த 1900ம் ஆண்டில் பிறந்த இவர் 19வது நூற்றாண்டை சேர்ந்த கடைசி நபர் என தெரிய வந்துள்ளது.  அவருக்கு பேர குழந்தைகள் என 160 பேர் உள்ளனர்.

ஜமைகா நாட்டை சேர்ந்த வயலட் பிரவுன் என்பவர் கடந்த செப்டம்பரில் தனது 117வது வயதில் மரணம் அடைந்த நிலையில் நபி அந்த இடத்தினை பிடித்துள்ளார்.  அவர் 7 மாதங்களுக்கு முன் இந்த சாதனையை அடைந்ததற்காக நடந்த நிகழ்ச்சியில் இசை கருவிகளின் இசைக்கேற்ப தனது கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இவரது மறைவை தொடர்ந்து மற்றொரு ஜப்பானிய பெண்ணான சியோ மியாகோ உலகின் மிக வயது முதிர்ந்த பெண் என்ற இடத்தினை பிடித்துள்ளார்.  10 நாட்களில் 117 வயது ஆகவுள்ள சியோ மியாகோ டோக்கியோ நகரின் கனகாவா பகுதியில் வசித்து வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
ENGW vs SCOW
diwali 2024 (1)
athirasam (1)
SA womens Won the Match
India whitewash Bangladesh
NZWvsSLW