அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு 100 டாலர்கள் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளையும் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்துவதால் அந்நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக அறிவித்தது. இந்நிலையில் மீண்டும் அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனாவால் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக புளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ், லூசியானா ஆகிய மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அமெரிக்க அரசு மக்களை தடுப்பூசி செலுத்துவதற்காக ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி நியூயார்க் நகரத்தின் மேயர் டெ பிளாசியோ, நாளை(ஜூலை 30) முதல் செப்டம்பர் மாத இரு வாரத்திற்குள் முதல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் மக்களுக்கு 100 டாலர்கள் பரிசு கிடைக்கும் என்று அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து செப்டம்பருக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு வாரம்தோறும் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…