கடந்த ஆண்டில் எய்ட்ஸ்க்கு 1 மில்லியன் பேர் பலி- அதிர்ச்சி!!

By

கடந்த 2016-ம் ஆண்டு எய்ட்ஸ் நோய்க்கு ஒரு மில்லியன் பேர் பலியாகியுள்ளதாக ஐ.நா., ஆய்வில் தெரியவந்துள்ளது.

 ஐ.நா., வெளியிடப்பட்ட அறிக்கை:-

கடந்த வருடம் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 3.65 கோடி பேரில், 1.95 கோடி பேர் சிகிச்சை பெற்றனர். அதே நேரத்தில் ஒரு மில்லியன் பேர் இந்த நோய்க்கு மரணமடைந்தனர். இது கடந்த 2005-ம் ஆண்டை விட 1.9 மில்லியன் இருந்தது.
கடந்த 2016-ம் ஆண்டு எய்ட்ஸ் நோயால் 1.8 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டனர். 1997-ம் ஆண்டு 3.5 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டனர்.
தற்போது உலகம் முழுதும் 7.61 கோடி பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் தற்போது வரை 35 கோடி பேர் மரணமடைந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Dinasuvadu Media @2023