#BREAKING: 3 முறை தோல்வி.., காணொளியில் பேச்சுவார்த்தை தொடங்கியது….!

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் நடந்து 18 நாட்கள் கடந்துவிட்டன. இருந்த போதிலும், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை. நேற்று கிவ் அருகே இர்பின் என்ற இடத்தில் ரஷ்யப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க பத்திரிகையாளர் கொல்லப்பட்டார்.
உக்ரைனின் மரியுபோல் நகரில் நிலைமை மோசமாகிவிட்டது. அங்கு உணவு மற்றும் தண்ணீரும் தீர்ந்துவிடும் விளிம்பில் உள்ளது. ரஷ்யாவில் மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கிள் செயல்பாடுகளை நிறுத்துமாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நடத்தி வரும் நிலையில், ரஷ்யா – உக்ரைன் இடையே நான்காவது சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது.
போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 4-வது சுற்று பேச்சுவார்த்தை காணொளி மூலம் நடந்து வருகிறது. நேரடியாக நடந்த 3 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், நான்காம் கட்ட பேச்சுவார்த்தை காணொளியில் நடைபெறுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
அண்ணனுக்கு பிரியாவிடை தந்த முதல்வர் ஸ்டாலின்.., மு.க.முத்து உடல் தகனம் செய்யப்பட்டது.!
July 19, 2025
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025