,

பாலாஜியின் மிஸ்டர் இந்தியா பட்டம் காலாவதி ஆயிடுச்சாமே.!

By

பாலாஜி தான் கூறி வரும் மிஸ்டர் இந்தியா பட்டம் காலாவதி ஆனதாக ஜோ மைக்கல் கூறியுள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தினமும் வாக்குவாதங்களும் , சண்டைகளும் என்று சுவாரசியமாக போகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தந்திரமாக விளையாடும் போட்டியாளர் பாலாஜி .

இவர் ஒரு டாஸ்க்கில் தான் மிஸ் இந்தியா என்று கூறியதுடன் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சவுத் இந்தியா என்ற நிகழ்ச்சியையும் நடத்தியதாக கூறியிருந்தார் . மேலும் சனம் அவர்களிடம் உங்கள் நிகழ்ச்சியை போன்று டுபாக்கூர் கிடையாது என்று அவரது நிறுவனத்தை விமர்சனம் செய்தது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது .  இந்த நிலையில் தனது நிறுவனம் குறித்து பாலாஜி கூறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லையேல் வக்கீல் நோட்டீஸ் பாலாஜிக்கு அனுப்பப்படும் என்றும் பாலாஜி விமர்சனம் செய்த நிறுவனத்தின் தலைவரான ஜோ மைக்கல் கூறியுள்ளார்.

மேலும் பேசிய ஜோ மைக்கல் , அவர் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சவுத் இந்தியா என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தவில்லை என்றும், அதற்கு அவர் உரிமையாளரும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஜூன் மாதமே பாலாஜியின் மிஸ்டர் இந்தியா பட்டம் காலாவதி ஆனதாகவும் , அதன் பின்னரும் அவர் அதனை பயன்படுத்துவதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Dinasuvadu Media @2023