அமெரிக்காவை அச்சுறுத்தும் பனிப்புயல்.! போக்குவரத்து துண்டிப்பு.!

Default Image

அமெரிக்காவில் ஆண்டுதோறும், பனிப்புயல் வீசுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இந்த ஆண்டு பனிப் புயலின் தாக்கம் பலமடங்காக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த இரு நாட்களாக வட கிழக்கு மாகாணங்களான கனெக்டிகட், டெலவர், மய்ன், மேரிலேண்ட், நியூ ஜெர்சி, நியூயார்க் மற்றும் பல மாகாணங்களில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. அமெரிக்காவில் ஆண்டுதோறும், பனிப்புயல் வீசுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இந்த ஆண்டு பனிப் புயலின் தாக்கம் பலமடங்காக அதிகரித்துள்ளது.

பனிப்புயல் காரணமாக பெரும்பாலான அமெரிக்க மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கின்றனர். சாலைகள் முழுவதும் பனி படர்ந்து இருப்பதால் போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் மின் இணைப்புகளும், எரிவாயு குழாய்களும், சேதம் அடைந்துள்ளன.

நியூயார்க் நகரம் பனிப்புயலால் அதிகம் பாதிக்கப்பட்டதால் அங்கு அவசர நிலை அமலுக்கு வந்துள்ளது. சாலைகளில் சில அடி உயரத்திற்கு பனி கொட்டிக்கிடப்பதால், பல நகரங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், விர்ஜீனியா, நியூயார்க் மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அதிகமான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பனிப்புயலால் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சாலையில் கொட்டிக் கிடக்கும் பனியை அகற்றும் பணிகள், மும்முரமாக நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது. இருப்பினும், சிலர் பனிப்புயலை வழக்கம்போல் ஆடல், பாடலுடன் வரவேற்கத் தொடங்கிவிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்