வெள்ளை மாளிகையில் பிடிஎஸ் குழு..!அதிபர் ஜோ பைடனுடன் கைவிரல் இதயத்துடன் போஸ்..!

Default Image

வெள்ளை மாளிகையில் பிடிஎஸ் குழு, அதிபர் ஜோ பைடனுடன் கைவிரல் இதயத்துடன் போஸ் கொடுத்த பிடிஎஸ் குழு.

செவ்வாய் கிழமை அன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை பிடிஎஸ் குழு வெள்ளை மாளிகையில் சந்தித்தனர். அதனை தொடர்ந்து பிடிஎஸ் மற்றும் ஜோ பைடன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிடிஎஸ் உறுப்பினர்களான ஆர்எம், ஜின், சுக, ஜேஹோப், ஜிமின், வி மற்றும் ஜுங்க்கூக் ஆகியோர் கருப்பு நிற கோட் சூட் உடைகளை அணிந்து அமெரிக்க அதிபருடன் பிரபலமான விரல் இதய வடிவத்துடன் போஸ் கொடுத்துள்ளனர். மேலும் பிடிஎஸ் குழு, ஜேம்ஸ் எஸ் பிராடி அறையில் ஆசிய விரோத வெறுப்புக் குற்றங்கள், ஆசிய உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மை பற்றிப் பேசியுள்ளனர்.

மேலும் அவர்கள் பிடிஎஸ்-இன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் அமெரிக்க அதிபருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் அதில் “எங்களை வெள்ளை மாளிகைக்கு அழைத்ததற்கு நன்றி! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி விவாதிக்க முடிந்தது, இது ஒரு பெரிய மரியாதை. மேலும் இதையெல்லாம் சாத்தியமாக்கிய பிடிஎஸ் ஆர்மிக்கு நன்றி என்று தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படம் ட்விட்டரில் வைரலானதை தொடர்ந்து பிடிஎஸ் ஆர்மியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் உள்ள பயனர்களில் ஒருவர், “பிடிஎஸ் குழுவை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன், எங்கள் சிறுவர்களைக் கவனித்துக்கொண்டதற்கு நன்றி ஜனாதிபதி பைடன், இது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
ENGW vs SCOW
diwali 2024 (1)
athirasam (1)
SA womens Won the Match
India whitewash Bangladesh
NZWvsSLW