உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் மீது கவனம் செலுத்தி வருகின்ற நிலையில், இதனைப் பயன்படுத்தி, சீனா தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க செனட் உறுப்பினர் ஜிம் இன்ஹோப் சீனா மீது குற்றஞ்சாட்டி உள்ளார்.
அமெரிக்க செனட் உறுப்பினர் ஜிம் இன்ஹோப், சீனாவை கடுமையாக விமர்சித்து நேற்று கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, உலக நாடுகள் பலகட்ட முயற்சிகளை எல்லாம் எடுத்து வருகிறது. ஆனால் அந்நாடுகள் மீது சீனா கொடூரமாக பல தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.
மேலும் இந்தியாவில், ராணுவ வீரர்கள், 20 பேரை கொன்று, சீன ராணுவம் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறது. சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியை உரிமை கொண்டாடும், தைவான், மலேஷியா, வியட்நாம், இந்தோனேஷியா போன்ற நாடுகளை ஆத்திரமூட்டும் வகையில் அந்நாடுகளுக்கு எதிராக சீனா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் ராணுவத்தில் அதிகம் முதலீடு செய்கின்றன. இதன்மூலம், அவர்களின் ராணுவ திறன் மேம்பட்டுள்ளது. இதில் இவ்விரு நாடுகளும், ஆக்ரோஷமாக வளர்ந்து வருகின்றது. அமெரிக்காவை வீழ்த்தவேண்டும் என்று சீனா முயற்சி எடுத்து வருகிறது;ஆனால் அது நடக்காத காரியம். உலகின் மிக வலிமையான ராணுவம் எங்களிடம் தான் உள்ளது. அதை எங்கள் எதிரிகள், முதலில் உணர வேண்டும் என்று சீனா,ரஷ்யாவிற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் அவருடைய பேச்சு அமைந்தது .
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…