அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா இறப்பு எண்ணிக்கை.! பள்ளிகளை மூட நியூயார்க் அரசாங்கம் உத்தரவு.!

Default Image

அமொரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250,029-ஆக உயர்ந்துள்ளதை அடுத்து நியூயார்க் அரசாங்கம் அங்குள்ள 1,800 பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை,அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கால் மில்லியனையும் கடந்து விட்டதாக கூறப்படுகிறது . ஜான்சஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, அமொரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250,029-ஆக உள்ளது என்று கூறியுள்ளது .

எனவே அமெரிக்காவில் உள்ள மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது.அதன்படி வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பது, பொது கூட்டங்களுக்கு தடை,உட்புற சாப்பாட்டை முடுவது உள்ளிட்ட கட்டுபாடுகளை விதித்துள்ளது.
மேலும் நியூயார்க்கில் மூன்று நாட்களில் கொரோனா பாதிப்பு மூன்று சதவீதமாக அதிகரித்ததால் வியாழக்கிழமை முதல் 1,800 பள்ளிகளை மூடுவதாகவும் , மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடைபெறும் என்றும் நியூயார்க் மேயர் தெரிவித்துள்ளார்.

மேலும் உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி,கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஐரோப்பா உள்ளதாகவும், அங்கு கடந்த வாரம் 49% இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கடந்த வாரம் தென்கிழக்கு ஆசியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று ஐரோப்பாவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான சுவிட்சர்லாந்தில் தீவிர சிகிச்சை பிரிவுகள் அனைத்தும் நிரம்பியுள்ளதாகவும், படுக்கைகள் மேலும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் , கொரோனா பரவுவதை தடுப்பதற்காக சுவிஸ் ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.  மேலும் ஹங்கேரியில் அவசரகால நிலை பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் ஈரானிய ஜனாதிபதி, சனிக்கிழமை முதல் தனது நாட்டின் பல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க போவதாக தெரிவித்திருந்தார் .

தென் ஆஸ்திரேலியா பள்ளிகள், கடைகள், விடுதிகள், தொழிற்சாலைகள், மற்றும் உணவுகளை மூட கோரி புதன்கிழமை அன்று பூட்டுதலை அறிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்