தென் ஆப்ரிக்கா அணிக்கு தொடரும் சறுக்கல் !காயம் காரணமாக விலகல் ……

By

கைவிரல் காயம் காரணமாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணித் கேப்டன் பாப் டூ பிளசிஸ் எஞ்சிய ஒருநாள் போட்டித் தொடரிலும் இருபது ஓவர் போட்டித் தொடரிலும் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா – இந்திய அணிகள் இடையே வியாழனன்று டர்பனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியின்போது பாப் டூ பிளசிஸ் வலக்கைச் சுட்டுவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

Image result for one day india vs south africa 2018 faf batting

 

அது குணமாக 3வாரம் முதல் 6வாரம் வரை ஓய்வெடுக்க வேண்டியிருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து எஞ்சிய 5ஒருநாள் போட்டிகளிலும், 3 இருபது ஓவர் போட்டிகளிலும் டூ பிளசிஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக பர்கான் பிகார்டியன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எஞ்சிய போட்டிகளுக்கான அணித் தலைவர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Dinasuvadu Media @2023