ஊழல் வழக்கில் தண்டனையை எதிர்த்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மேல்முறையீடு…!!
ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மேல்முறையீடு செய்துள்ளார். பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில், நவாஸ் ஷெரீப்புக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவருடைய மகள், மருமகன் ஆகியோருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இருப்பினுல், அவர்கள் 2018 செப்டம்பர் மாதம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். மற்ற 2 வழக்குகளையும் 2018ம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதிக்குள் முடிக்குமாறு நீதிமன்றம் கெடு விதித்தது. அதன்படி, 2 வழக்குகளிலும் கடந்த 24ஆம் தேதி தீர்ப்பு வெளியானது.
அதில், அல்-அஜிசியா உருக்காலை ஊழல் வழக்கில், நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டு, சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து நவாஸ் ஷெரீப், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.