லடாக் எல்லைப்பகுதியில் அத்துமீறி நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்போம் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தியாவுக்கான ஜப்பான் துாதர், சடோஷி சுசூகி, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியுள்ளதாவது: லடாக்கில், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை, ஜப்பான் கடுமையாக எதிர்க்கும். எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எல்லாம் ஜப்பான் முழுமையாக ஆதரவு அளிக்கும்.லடாக் எல்லைப் பிரச்னை பற்றி, இந்திய வெளியுறவு செயலர், ஹர்ஷ் வர்த்தன் ஷ்ரிங்லாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையானது திருப்திகரமாக இருந்தது.எல்லை பிரச்னைக்கு தீர்வு காணும் இந்திய முயற்சிகளை, சீனா ஏற்க வேண்டும்.மேலும் இந்திய மற்றும் ஜப்பானிய கடலோர காவல் படையைச் சேர்ந்த ரோந்து கப்பல்கள் கடந்த, 27ம் தேதி, இந்திய பெருங்கடலில், இணைந்து பயிற்சியில் ஈடுபட்ட நிகழ்வானது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…