ஜோ பைடன் ஒரு பேரழிவு! ஊழலின் உருவகம் அவர் தான் – அதிபர் ட்ரம்ப்

ஜோ பைடனை குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
உலக அளவில் கொரோனா பாதிப்பில், வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த பராபரப்பான சூழலுக்கு மத்தியில், அங்கு வருகிற மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிற நிலையில், இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில், ஜோ பைடன் ஒரு பேரழிவு. அவர் ஊழலின் உருவகமாக உள்ளார். அவர் நாட்டிற்காக என்ன செய்தார். அவர் ஊழல் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், ஜோ பைடன் உங்கள் வேலை வாய்ப்புகளை பிடுங்கி, உங்கள் கம்பெனிகளை மூடி விடுவார்.’ என்றும் சாட்டியுள்ளார்.