முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!தென் ஆப்ரிக்கா யூகம் பொய்யானது ……

By

27 பந்துகள் மீதம் இருந்த நிலையில், 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 270 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டர்பனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஃபாப் டூ பிளெஸ்ஸிஸ் 120 ரன்கள் அடித்தார்.

Image result for india vs south africa 2018

இந்திய அணியின் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பின்னர் களமிறங்கிய இந்திய அணியில், கேப்டன் விராட் கோலி சதம் அடித்து, அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கினார்.

27 பந்துகள் மீதம் இருந்த நிலையில், 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 270 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Dinasuvadu Media @2023